ஞாயிறு, 4 மார்ச், 2018

எதார்த்தம்

எதார்த்தம்  எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை.இன்றைய சூழலில் நம்ப முடியாத வித்தியாசமான அர்த்தம் தரக்கூடிய வார்த்தை.இதற்கு துல்லியமான அர்த்தம் வெகுளித்தனமான என்று சொல்லலாமா?
எதார்த்தம் தமிழ் சொல்லா? அந்த சர்ச்சைக்கு நான் வரவில்லை.ஆனால் யாராலும் எதார்த்தமாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது.ஆனால் யாரையும் எதார்த்தமானவன் என்று சொன்னால் பெருமையாக ஏற்றுக்கொள்வான்.
எங்கும் எதார்த்தத்தை காண முடியாதென்றே தோன்றுகிறது.வியாபாரி எதார்த்தமாக இருந்தால் யாரும் இருக்க விடுவார்களா?அடக்கம் இவ்வளவு,செலவு இவ்வளவு,எனது இலாபம் இவ்வளவு என துல்லியமாக சொல்லும் வியாபாரியைக் காணமுடியுமா? இல்லை இவ்வாறு ஒருவர் இருந்தால் யாரும் நம்புவார்களா?வருமானவரிக்காரன்கூட நம்ப மாட்டான்.
அலுவலகத்தில்கூட உண்மை விளம்பிகளைப் பார்க்க முடியமா?
முன்பு ஒரு கதாசிரியர் எதார்த்தம் பொன்னுசாமி என்ற பெயரில் எழுதினார் என்று நினைவு.ஆனால் எதார்த்தமாக ஒருவன் இருந்தால் எப்படி இருக்கும்?
ஆஹா எதார்த்தம் ஒரு கனவுதான்.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக