பொங்கல் கொண்டாட்டம் மற்றும் மலரும் கடந்த கால வசந்தங்கள்
17 Jan 2019 11:46:32
பொங்கல்
- ஒன்று.காலை பள்ளி விடுமுறையானதால் தாமதமாக எழுந்து அம்மாவிடம் திட்டு வாங்கிகுளித்து பொங்கல் வைக்க அம்மாவுக்குக்கூட இருந்து உதவிக்கொண்டு அம்மா பொங்கல் வைக்கும் அழகை வேடிக்கை பார்ப்பதே இனிமையான ஒன்று.பொங்கலுக்கு ஒரு சில நாட்கள் முன்னரே ஆவலுடன் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு நாட்களை எண்ணுவதே இன்பம்தான்.பொங்கல் பொருட்களை நானும் எனது தங்கைதான் வாங்கி வருவோம்.புத்தரிசி,வெல்லம்,முந்திரி,உலர்திராட்சை,ஏலக்காய் முதலிய மளிகைப் பொருள்களையும்,பொங்கல் ஸ்பெசலான கரும்பு,பனங்கிழங்கு,கத்திரிக்காய்,வாழைக்காய்,பிளக்காய்,பரங்கிக்காய்,அவரைக்காய்,தேங்காய் வாங்கிவருவோம்.மேற்கண்ட சில காய்கறிகள் பொங்கல் காலத்தில்தான் கிடைக்கும்.பொங்கலுக்கு ஒரு வரம் முன்பே வீட்டை சுத்தம் செய்ய தொடங்கிவிடுவோம்.தொலைந்து போன பல பொருட்கள் கிடைக்கும்.அந்த ஆனந்தமே தனிதான்.போகியன்று எங்கள் உள்ளங்களைப்போன்று வெள்ளைவெளேறென்று பளிச்சென்று இருக்கும்.அதில் ஒரு அறிவியலும் உண்டு.சுண்ணாம்பு அடிப்பதால் சிலந்திகள்,சிறுசிறு பூச்சிகள் அவற்றின் கூடுகள் அழிக்கப்படுவதுடன் சுத்தமாகவும் இருக்கும்.இப்போது ஆயில் பெயிண்ட் அடிப்பதால் கழுவினால் போதும் ஆனால் வெள்ளை அடிக்கும் பழக்கம் மாறியதால் சுண்ணமு அடிக்கும் தொழில் நசிந்துபோனது.கிராமங்களில் இன்னும் வெள்ளை அடிக்கிறார்கள்.ஆயில் பெயிண்ட்ஆல் அந்த மகிழ்ச்சி இன்றைய பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை.பொங்கல் முதல்நாள் பொங்கல் பானைக்கும், அடுப்புக்கும் கோலம் போடுவார்கள்.பொங்கல் வைக்கும் இடத்துக்கும் கோலம் போடுவதுண்டு.அதற்க்கு நடுவீட்டு கோலம் என்று பெயர்.காண ஜோராக இருக்கும்.அப்போதே பொங்கல் கலை கட்டி விடும்.பொங்கலன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கும்போது நான்தான் சங்கு ஊதுவேன் .சங்கு ஊதும் உரிமை எனக்குத்தான்.வேறு எனது தங்கைகளுக்கு ஊததெரியாது.எனது முதல் ஆசான் எனது அம்மாதான் கற்றுக்கொடுத்தார்கள்.அவர்களுக்கு என் மீது பாசம் அதிகம்.பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாக மங்களமாக வாழ்த்துரைப்போம்.பொங்கல்,காய்கறிகள் சமைத்தவுடன் தலை வாழை இலை போட்டு சமைத்த கைகளை பரிமாறி நடுவில் சர்க்கரைப்பொங்கல்,வெண்பொங்கலைப் பரிமாறியவுடன் பார்க்கவே ஆனந்தம் பேரானந்தம்.நமக்கு ஒளியையும்,உலக உயிர்கள் வாழ வருடம் முழுவதும் ஒளி தரும் சூரியனை வணங்கி வழிபடுவதே நன்றி செலுத்துவதாகும்.பின்பு இலை முன்பு அமர்ந்து அணைத்து குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிடுவதே பிறவிப்பயனாகும்.ஆஹா என்ன ருசி.ரசாயனம்,பூச்சிமருந்து,உரம் கலக்காத சுவையான உணவு.காகத்துக்குத்தான் முதல் இலை.அடுத்தநாள் மாட்டுப்பொங்கல் உணவு பயிரிட உதவும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும்நாள்.மாடுகளுக்கு குஷியான நாள்.கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மாலையிட்டு,சலங்கை கட்டி நன்றி செலுத்தும் நாள்.மலர்கின்ற நினைவுகள்.
credit: third party image reference
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக